குமரியில் சொன்னவுடன் கொட்டித் தீர்த்தது மழை! தென்காசி, நெல்லைக்கு மழை பெய்ய வாய்ப்பு!!

தற்போது நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் பெருவாரியான மாநில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.கனமழை

தமிழகத்தில் பல அணைகளில் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதுவும் குறிப்பாக கன்னியாகுமரி,திருநெல்வேலி , தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இந்த மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தென்காசி மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புலியூர்குறிச்சி, தக்கலை, அழகிய மண்டபம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.திங்கள்சந்தை,குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தற்போது மழை பெய்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment