டி20 உலகக் கோப்பை இந்திய அணியை குறித்து ரெய்னா என்ன சொன்னார் தெரியுமா?

சுரேஷ் ரெய்னா இந்தியாவின் முன்னர் கிரிக்கெட் வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் அவர் தற்போது நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை பற்றி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இல்லாத போதிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் திறன் கொண்ட வீரர்கள் இந்தியாவிடம் இருப்பதாக ரெய்னா நினைக்கிறார்.

டி20 உலகக் கோப்பை – பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெறுமா?

“அணி இப்போது நன்றாக இருக்கிறது. பும்ராவுக்குப் பதிலாக ஷமி வந்துள்ளார், இது கொஞ்சம் கூடுதல் பலம். எங்களிடம் அர்ஷ்தீப் சிங், சூர்யகுமார் யாதவ் உள்ளனர். அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர், விராட் கோலி மிகவும் நன்றாக இருக்கிறார். ரோஹித் சர்மா மிகச் சிறந்த தலைவர், முதல் போட்டியில் வெற்றி பெற்றால், அது நமக்கு நல்ல தொடக்கம் அமைக்கும். நாட்டில் உள்ள அனைவரும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், அவர்கள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று ரெய்னா கூறினார்.

கிராமத்து ஸ்டைல் வத்தல் குழம்பு! எப்படி செய்யனு தெரியுமா?

மேலும் “ஜஸ்பிரித் பும்ரா அல்லது ரவீந்திர ஜடேஜாவை இடத்தை உங்களால் மாற்ற முடியாது என்பதால் நான் அவரை சரியான மாற்று என்று அழைக்க மாட்டேன். அவர்கள் இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் உங்களுக்கு இருந்த சிறந்த வாய்ப்பாக , நீங்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். ஷமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நல்ல பார்மில் உள்ளார். போட்டிக்கு 15 நாட்களுக்கு முன்பு அணியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதில் பிசிசிஐ மிகவும் சிறப்பாக செயல்பட்டது” என்று ரெய்னா கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment