21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதையும் இதனால் பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு என்ற அறிவிப்பு பொது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment