இன்று 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த அளவு குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

நேற்று தீபாவளி தினத்தில் கூட சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
குறிப்பாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் நகரின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் இன்று கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment