Connect with us

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை.!!!

rain chennai4101 1638687228

செய்திகள்

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை.!!!

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை.!!!

தற்போது நம் தமிழகத்தில் கோடை கால நிலவுக்கிறது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் நாளையதினம் தென்மாவட்டங்களில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இருப்பினும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top