நவம்பர் 24, 25ல் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை!

நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மீண்டும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த கனமழை காரணமாக சென்னை உள்பட பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பதும், இதனால் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மழை ஓரளவுக்கு நின்று இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் மழையின் தீவிரம் குறைந்து, பிறகு மீண்டும் வலுப்பெறும் என்றும், வரும் 24, 25 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print