Connect with us

13 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகிறது மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Tamil Nadu

13 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகிறது மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

caa35d06ff4fdb235ef6563b7509fd3d

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் தினந்தோறும் மழை பெய்து வருகிறது என்பதும் மழை குறித்த நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: லகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top