பிப்ரவரி 27-28 தேதிகளில் மழை !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆர்எம்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிப்ரவரி 24 முதல் 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், பிப்ரவரி 27 முதல் 28 வரை கடலோர மாவட்டங்களில் தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். ”

விமானத்தில் அவசர வாசல் பக்கத்தில் அண்ணாமலை; வைரலாகும் வீடியோ!

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.