தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை !

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என மண்டல வானிலை மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. , .

திங்கள்கிழமை (மே 1) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நாமக்கல், சேலம், தர்மபுரி, கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: எந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்?

செவ்வாய்க்கிழமை (மே 2) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.