இன்று முதல் தென்கிழக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை!

தமிழகத்தின் தென்கிழக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் மார்ச் 15-ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆர்எம்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 15ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். .”என தெரிவித்துள்ளனர்.

என்எல்சி விவகாரத்தில் திமுகவை கடுமையாக குற்றம் சாட்டிய விஜயகாந்த்!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: “அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.