தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை!!

தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அது குறித்து தற்போது சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.கனமழை

விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.

மணப்பாறை, வையம்பட்டி, புத்தாநத்தம், பண்ணங்கொம்பு துவரங்குறிச்சி பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. திருத்தணி ,ஆர்கே பேட்டை, கே.ஜி.கண்டிகை  ,கனகம்மாசத்திரம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. சென்னை தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர் ,செம்பாக்கம், மேடவாக்கம் ,பெருங்களத்தூர் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment