அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடமேற்கு பருவமழை மற்றும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.