11 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் கனமழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு பெற்றதையடுத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாகவும் அடுத்த இரண்டு தினங்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கையை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் அதாவது கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் லேசானது முதல் மிதமான மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு கரையை கடக்கும் வரை தமிழகத்தில் உள்ள தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

bus rain1அதேபோல் நாளை தமிழ்நாடு புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் டிசம்பர் 23-ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய மழை தமிழகத்தில் உள்ள ஊரில் மாவட்டங்களில் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வரை சூறைக் காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.