4 மாவட்டங்களில் சில மணி நேரங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

659dece7ae9969a6be2e12b63cb70a52

இன்னும் ஒரு சில மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

தினந்தோறும் மழை குறித்த விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் அதன்படி தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மழை பெய்யும் என்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் சென்னையில் இன்று மேகமூட்டமாக இருக்கும் என்றும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்யும் என்றும் இது குறித்த விரிவான அறிக்கை நாளை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment