உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில்… வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் பயங்கரம்! தீக்கிரையான இருசக்கர வாகனம்..!!

அதன் படி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் சென்னை, திருவள்ளூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று முதல்! சில்லறை பண பரிவர்த்தனை.. 4 நகரங்களில் அறிமுகம்!!

சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.