தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!:வானிலை ஆய்வு மையம்;

நம் தமிழகத்தில் அக்டோபர் மாத இறுதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து காணப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் புதிதாக மூன்றாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இந்த மூன்றாவது காற்றழுத்த தாழ்வு பகுதி தென் தமிழகத்திற்கு அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்

இதன் காரணமாக ஏற்கனவே தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறுகிறது.

அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, குமரி, தூத்துக்குடி ,ராமநாதபுரம் சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மயிலாடுதுறை, கரூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment