தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது மழை; எந்தெந்த மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு?

2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் விளைவாக நவம்பர் மாதம் முழுவதும் நம் தமிழகத்தில் கன மழை கொட்டி தீர்த்தது. அதே வேளையில் நவம்பர் மாதம் பெய்த கனமழையால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான அணைகள், ஏரிகள் முழுவதும் நிரம்பின.

மழை

அதன் பின்னர் டிசம்பர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால் கடலோர மாவட்டங்களுக்கு மட்டும் இந்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஜனவரி எட்டாம் தேதியில் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக கூறியதால் தென் கடலோர மாவட்டத்தில் வாழும் மக்கள் ஓரளவு நிம்மதியில் காணப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment