தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை; நாளை 3 மாவட்டங்களில் கனமழை! ஜனவரி 1ஆம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை!: வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் மாதம் தொடங்கியது முதல் தமிழகத்தில் கனமழை மெல்ல மெல்ல குறைந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் குமரி முதல் சென்னை வரை கடலோரத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மழை

இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை  மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது .

மழை

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் நாளை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர் விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜனவரி 2 ஆம் தேதியில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. ஜனவரி 3ஆம் தேதி செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மண்டபம், புவனகிரியில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment