Connect with us

அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வெயிலின் தாக்கம் குறையுமா?

weather 1

செய்திகள்

அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வெயிலின் தாக்கம் குறையுமா?

அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வெயிலின் தாக்கம் குறையுமா?

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் எதிர்பாராதவிதமாக மழை பெய்தது. ஏனென்றால் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விலகி ஓரிரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்த மழை இன்னும் 5 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தலைநகர் சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் கூறியது.

தமிழகத்தில்  அதிகபட்சமாக தென்காசி சிவகிரி, மேலூரில் தலா 3 சென்டி மீட்டர் மழையும், உசிலம்பட்டியில் 2 சென்டி மீட்டர் மழையும், கோவில்பட்டியில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இதனால் வர இருக்கின்ற 5 நாட்களுக்கும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளதால் வெயிலின் தாக்கம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top