Connect with us

ப்ரேக்கிங் நியூஸ்: இன்று மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

rain

தமிழகம்

ப்ரேக்கிங் நியூஸ்: இன்று மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

ப்ரேக்கிங் நியூஸ்: இன்று மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் வானிலையானது தினந்தோறும் மாறிக்கொண்டே தான் காணப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தை விட்டு முற்றிலுமாக வடகிழக்கு பருவமழை விலகியதற்கு பின்பு தான் அடுத்தடுத்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நாளைய தினம் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தலைநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top