இன்று 14 மாவட்டங்களில் மிக கனத்த மழை: வானிலை எச்சரிக்கை

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்று முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வரங்களை தற்போது பார்ப்போம்:

அக்டோஅர் 16: நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கரூர்

அக்டோபர் 17: குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகள்

அக்டோபர் 18: வடக்கு, உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகள்

அக்டோபர் 19 மற்றும் 20ம் தேதிகள்: தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சியில் ஒரு சில மாவட்டங்கள்

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் நகரில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment