
Tamil Nadu
9 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
9 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
கடந்த சில மாதங்களாக மழை குறித்த நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 9 மாவட்டங்கள் பின்வருமாறு: ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இன்று இரவு சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
