மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வேண்டும் – இபிஎஸ்!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா பகுதிகளில் விளையும் நெல் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது.

இந்நிலையில் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக இபிஎஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களை கண்காணிக்க பறக்கும் படை – ஐகோர்ட் அதிரடி!!

இதன் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதே போல் சேதமாகியுள்ள நிலங்களை கணக்கெடுக்க வேண்டும் என்றும் இது குறித்து அரசு அதிகாரிகளை அனுப்பி உரிய முறையில் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

மேலும், இத்தகைய கோரிக்கைகளை விரைந்து செயல்பட வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment