Connect with us

ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் மீண்டும் குறைப்பு?

platform ticket7

News

ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் மீண்டும் குறைப்பு?

ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் மீண்டும் குறைப்பு?

ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் திடீரென 50 ரூபாய் என உயர்த்தப்பட்டது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் பழைய நிலைக்கே ரயில்வே டிக்கெட் ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு நேரத்தில் ரயில் நிலையங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக 5 ரூபாய் என விற்பனையாகிக் கொண்டிருந்த பிளாட்பார்ம் டிக்கெட் திடீரென 50 ரூபாய் என உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ரயில் நிலையத்திற்கு தேவையில்லாமல் வருவோர் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து மீண்டும் ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் 50 ரூபாயிலிருந்து பழைய நிலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எனவே எந்த நேரத்திலும் ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் மீண்டும் பழைய நிலைக்கு வருவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top