
தமிழகம்
ரயில்வே மேம்பாலம் பழுது-ஒரு மாதத்திற்கு போக்குவரத்துக்கு தடை!!
சமீப காலமாக நம் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் ரயில்வே போக்குவரத்துப் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதுவும் குறிப்பாக வட தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து ரயில் போக்குவரத்து சேவை சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக ஓரிரு நாட்களுக்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு காணப்படும். இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு பகுதியில் சுமார் ஒரு மாதத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை பயணிகளுக்கு கொடுத்துள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுதடைந்து உள்ளதால் நாளை முதல் ஒரு மாதத்திற்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி போக்குவரத்துக்கு தடை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூரிலிருந்து ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
