ரயில் தடம் புரண்டு விபத்து! 5 பேர் உயிரிழப்பு; நிவாரணத் தொகை அறிவிப்பு!!

முன்பெல்லாம் வெளியூருக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் கூட வாகனங்கள் கிடையாது. ஆனால் இப்பொழுதோ பக்கத்துத் தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் கூட வாகனம் இல்லாமல் வெளியே செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறோம். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் ஏராளமாக வந்து விட்டது.

இதில் அதிக விரைவாகவும், செலவு குறைவாகவும் காணப்படுகின்றது எது என்றால் அதை ரயில் போக்குவரத்து சேவை என்றே கூறலாம். என்னதான் ரயில் போக்குவரத்து செலவு குறைவாக இருந்தாலும் அவ்வப்போது பெட்டிகள் புரண்டு பெரிய அளவிற்கு விபத்துகள் உருவாகின்றன.

இந்த விபத்துகளில் ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. அந்தபடி மேற்கு வங்கத்தில் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி மேற்கு வங்க மாநிலத்தின் அருகே உள்ள கவுகாத்தி-பிகானேர் விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் பரிதாபமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். கவுகாத்தி-பிகானேர் விரைவு ரயில் மேற்கு வங்கத்தின் தோமோஹனி அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகிறது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment