முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய எம்எல்ஏவான தங்கமணி வீட்டில் இரண்டாவது முறையாக மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் கடந்த முறை சோதனை நடத்தியதில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நாமக்கல், குமாரபாளையத்தில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். குறிப்பாக நில அளவையிடும் பணியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது இடத்தின் மதிப்பு, எவ்வளவு பரப்பளவில் வீடு கட்டப்பட்டு உள்ளது என்ற அடிப்படையில் சோதனை நடைப்பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.