Connect with us

‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் ரெய்டு!! ஸ்கெட்ச் போட்ட போலீஸ்!

202112131543529179 Tamil News Tamil News Vembakottai near alcohol sales arrest SECVPF

செய்திகள்

‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் ரெய்டு!! ஸ்கெட்ச் போட்ட போலீஸ்!

ஆந்திராவில் இருக்கும் நகைக்கடையில், சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ சினிமா பாணியில் போலி வருமான வரித்துறை சோதனை நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களாக சினிமா பட பாணியில் ரெய்டு நடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆந்திரா அடுத்த நெல்லூரில் பிரபல நகைக்கடையில் ஒரு கும்பல் புகுந்தனர்.

அப்போது போலி அடையாள அட்டைகளைக் காட்டி வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, போலி வாரண்ட்டை காட்டி ரெய்டு நடத்த தொடங்கினர். இந்நிலையில் சுமார் 5 கோடி மதிப்பிலான 12 கிலோ நகைகளை கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், ரெய்டு நடத்துவது  போல் நகை கடையில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top