முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு: லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல்!!

தமிழகத்தில் எல்இடி விளக்கு விவகாரம் தொடர்பாக இன்றைய தினத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

குறிப்பாக எல்இடி விளக்கு விவகாரத்தில் சுமார் 500 கோடி ஊழல் செய்ததாக 2020, 2021- ஆண்டுகளில் வந்த புகாரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்பான 13 இடங்களில் சோதனை நடத்தினர்.

இத்தகைய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.18.37 லட்சம், 1,872 கிராம் தங்கம், 8.28 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் 120 ஆவணங்கள், 1 சிடி, 1 பென்டிரைவ், 2 ஐபோன்கள், 4 வங்கி பெட்டக சாவிகள் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment