Connect with us

RAID:முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

727649 vijayabaskarc 090618

தமிழகம்

RAID:முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் , சேலத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வரும் மருத்துவர் மனோகரன்,  மருத்துவர் சுஜாதா  மற்றும் மருத்துவர் வசந்தகுமார் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பாக சேலத்தில் மூன்று அரசு மருத்துவர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மனோகர், சுஜாதா மற்றும்  வசந்தகுமார் ஆகிய மூன்று பேர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சேலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் உள்ள பாரதி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மருத்துவர் வசந்தகுமார் வீட்டிலும்,  சேலம் பழனியப்பா நகர் பகுதியில் வசித்து வரும் மருத்துவர் சுஜாதா வீட்டிலும் , அதேபோல சேலம் சீரங்கப்பாளையம் பகுதியில் வசித்து வரும் மருத்துவர் மனோகர் வீட்டிலும் இன்று காலை முதல் சென்னை மற்றும் சேலத்தைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..

சேலம்பழனியப்பாநகரில்வசித்துவரும்மருத்துவர்சுஜாதாவின்கணவர்மருத்துவர்ஜெமினி , சேலம் மாவட்டம்  ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்ட ஆத்தூர்  சுகாதார மாவட்ட துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top