மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் புதிய சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்வு!!

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஏனென்றால் மகாராஷ்டிராவின் முந்தைய முதல்வராக இருந்த உத்தர தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தோல்வி அடைந்தார்.

இதனால் சிவசேனா கட்சியின் மூத்த உறுப்பினரான யஸ்வந்த் சிங்கே முதலமைச்சராக அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் ஆக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் ராகுல் நர்வேகர், சிவசேனாவில் ராஜன் சால்வி போட்டியிட்ட நிலையில் ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

164 வாக்குகள் பெற்று மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment