உச்சநீதிமன்றத்தால் குஷியான ராகுல்! நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவாதம் உறுதி!!

நம் இந்தியா ஜனநாயக நாடாக இருக்கிறது.  ஜனநாயக நாடாக இருந்தாலும் தற்போது பல பகுதிகளில் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டு காணப்படுகிறது. ஒரு சில நேரங்களில் தாங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கும் செயலும் அதிகரித்துள்ளது.ராகுல் காந்தி

இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் மீது குற்றம் சாட்டி வழக்கு தொடுத்திருந்தார், உச்சநீதிமன்றம் வலுவான உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதனால் மகிழ்ச்சியில் உள்ளார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி.

அதன்படி இந்திய ஜனநாயகத்துக்கு முயற்சிகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி பெகாசஸ் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறிய பல கருத்துக்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும் விசாரணையில் உண்மை வெளிவரும் என்று நம்புகிறோம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். யாருக்காக இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டது? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

இந்திய மக்கள் பற்றிய தகவல்களை வேறு எந்த நாடாவது உள்ளதா? என்று ராகுல் காந்தி கேள்வி கேட்டுள்ளார். இந்திய ஜனநாயகத்தை சிதைக்கும் முயற்சியாகவே பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி கூறினார்.

பெகாசஸ்  விவகாரத்தை விசாரிப்போம் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பது மிக பெரிய நடவடிக்கை ஆகும் என்றும் ராகுல் காந்தி கூறினார். செல்போன் விவகாரத்தில் உண்மை வெளிவரும் என்று நம்புவதாக ராகுல்காந்தி பேட்டியளித்தார்.

பெகாசஸ்  மூலம் செல்போன் ஒட்டுக் கேட்க பட்ட பிரச்சனையில் மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்றும் ராகுல் காந்தி கூறினார். விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்துவோம் என்றும் ராகுல் காந்தி பேட்டியளித்தார்.

செல் போன் ஒட்டுக்கேட்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பாஜக நிச்சயம் விரும்பாது என்றும் ராகுல் காந்தி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment