எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ஆகிறார் ராகுல் காந்தி.. பாஜகவுக்கு சிக்கலா?

எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களாக நடத்தி வரும் இந்திய ஒற்றுமை பயணம் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாததால், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யாமல் தேர்தலை சந்தித்ததால் தோல்வியடைந்தது. அந்த தவறை இம்முறை செய்யக்கூடாது என்பதற்காக பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க இருப்பதாகவும் இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் நாடு முழுவதும் எழுச்சியை ஏற்படுத்திய ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

MK Stalin Rahul Gandhi

எனவே நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரம்மாண்டமான கூட்டணி உருவாக இருப்பதாகவும் அந்த கூட்டணிக்கு ராகுல் காந்தி தலைமை தாங்குவார் என்றும் அவரே பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

சந்திரசேகரராவ், மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின், சரத்பவார், நிதிஷ்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டதாகவும் எனவே இன்னும் ஓரிரு மாதங்களில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.