காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களாக ஒற்றுமை நடைப்பயணத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த நடைபயணத்தை முன்கூட்டியே முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கினார் என்பதும் இந்த நடைபயணத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராகுல் காந்தி இந்த நடைபயணத்தை கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து வரும் நிலையில் இந்த பயணத்தை காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் பிப்ரவரி 20ஆம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது
இந்த நிலையில் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த நடைபயணத்தை முன்கூட்டியே முடிக்க ராகுல்காந்தி முடிவு செய்திருப்பதாகவும் இதன்படி ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் கொடியேற்றத்துடன் முடித்து வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தல் பணிகள் அதிகம் இருக்கிறது என்றும் காங்கிரஸ் சார்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் பிரச்சாரங்கள் ஆகியவை இருப்பதால் முன்கூட்டியே நடைபயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக இன்னும் இந்த தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது