இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தினமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்க இருக்கிறார்.
இதன் காரணமாக இன்று காலை தமிழகம் வந்த அவர், அவருடைய தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வீணை காயத்ரியின் இசை அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிலையில் தந்தையில் நினைவிடத்தில் 3 மாம்பழங்களை வைத்து வழிப்பட்டார். இதற்கு பலரும் ராஜீவ் காந்திக்கு மிகவும் பிடித்தது மாம்பழம் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறிகின்றனர்.
மேலும், ராகுல் காந்தியில் வருகையை முன்னிட்டு கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திரிவேணி சங்கமம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.