காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் மத்திய அமலாக்க துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரசார் பேரணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பேரணியில் ஈடுபட்ட எம்.பி ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறையின் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பாத் சாலையில் அமர்ந்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை என்ற பெயரில் முடக்க முயல்வதாகவும், விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி போன்ற பிரச்சனைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி, “நான் கைதாக போவதில்லை, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மக்களின் குரலுக்காகப் போராட்டம் நடத்துகிறேன்…” எனக்கூறினார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த அமளிக்குப் பிறகு, காங்கிரஸ் எம்.பி.யை போலீஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்யப்பட்ட மற்ற எம்.பி.க்களுடன் பேருந்தில் ஏற்றினர்.
“இந்தியா ஒரு போலீஸ் ராஜ்யம், (பிரதமர் நரேந்திர) மோடி ஒரு ராஜா,” என்று காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தும் இந்திரா காந்தியின் கறுப்பு வெள்ளை புகைப்படத்துடன், ராகுல் காந்தியின் புகைப்படமும் இணைக்கப்பட்டு சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
जंजीर बढ़ा कर साध मुझे,
हाँ, हाँ दुर्योधन! बाँध मुझे।बाँधने मुझे तो आया है,
जंजीर बड़ी क्या लाया है?इतिहास दोहरा रहा है…#SatyagrahaWithSoniaGandhi pic.twitter.com/wroc7cLtk9
— Congress (@INCIndia) July 26, 2022