Connect with us

காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்று கொள்ள வேண்டும்-ராஜஸ்தான் முதலமைச்சர்;

ராகுல் காந்தி

செய்திகள்

காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்று கொள்ள வேண்டும்-ராஜஸ்தான் முதலமைச்சர்;

20 ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் மிகப் பெரிய கட்சியாக காணப்பட்டது காங்கிரஸ். அதன் பின்பு மெல்ல மெல்ல பல கட்சிகளின் வரவால் காங்கிரசுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்துள்ளது.

தற்போது காங்கிரஸ் வெறும் இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் அடுத்த புதிய தலைவர் யார் என்ற கேள்வியும் குழப்பமும் எழுந்துள்ளது.

மேலும் பலரும் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்று கொள்ள வேண்டும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம் என்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார். கட்சி தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்று கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த 32 ஆண்டுகளாக நேரு குடும்பத்தை சேர்ந்த யாரும் பிரதமர் பதவியில் அமர்ந்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top