Connect with us

3வது நாளாக இன்று மீண்டும் ஆஜராகிறார் ராகுல் காந்தி!

ராகுல் காந்தி

News

3வது நாளாக இன்று மீண்டும் ஆஜராகிறார் ராகுல் காந்தி!

நேஷன்ல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கதுறையில் இன்றும் 3-வது நாளாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி ஆஜராக உள்ளார்.

நேஷன்ல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற நிலையில் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி பதிவு செய்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக அவரிடம் தீவிரமாக விசாரணை நடைப்பெற்றது. குறிப்பாக முதல் நாள் விசாரனை சுமார் 10 மணி நேரம் நடைப்பெற்றது. அதே போல் நேற்று சுமார் 11 மணி நேரம் விசாரணை நடைப்பெற்றது.

இந்த சூழலில் இன்று அவரிடம் சில முக்கியமான கேள்விகள் கேட்டு வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் அமலாக்கத் துறை விசாரணைக்கு  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் டெல்லி காவல்துறையினர் வழக்கம்போல் 3 அடுக்கு காவல் பாதுகாப்பு செய்துள்ளது. மேலும், இந்த 3-வது நாள் விசாரணை இன்றுடன் நிறைவடையுமா அல்லது நாளை தொடருமா என்பது குறித்த தகவல் இன்று தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top