Tamil Nadu
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஏற்கனவே அதிமுக திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டன
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் தற்போது தேர்தல் களத்தில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ராகுல்காந்தியின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளது என்பதும் ஏற்கனவே தெரிந்ததே. அந்த வகையில் நாளை முதல் தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்
நாளை முதல் நாளாக தாராபுரத்தில் பிரமாண்டமான பிரச்சாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி உள்பட ஒருசில தேசிய தலைவர்களும் மாநில தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
திமுக அதிமுகவை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் களத்தில் குதித்து உள்ளதால் தேர்தல் களம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
