நாளை சென்னை வருகிறார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி!! பின்னணி என்ன?
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கவுன்சிலர்களுடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாளை கலந்துறையாடுகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி . இதனை தொடர்ந்து 135 நகராட்சிகள் 435 பேரூராட்சிகளை தன்வசம் ஆக்கியது.
இந்நிலையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களை சந்தித்து அவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க ராகுல் காந்தி நாளை சென்னை வருகை தருகிறார்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும் நாளை மதியம் சத்திய மூர்த்தி பவன் வந்த சேர கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
நாளை காலை சென்னை வரும் ராகுல் காந்தி கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். இந்நிகழ்ச்சி முடிந்ததும் நாளை இரவு அவர் டெல்லிக்கு புறப்பட்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
