ஒற்றுமை யாத்திரை தொடங்குவதற்காக ராகுல்காந்தி கன்னியாகுமரி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்த ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் இந்த நடைபயணம் தொடங்க உள்ளது. 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கி.மீ தூரம் வரையில் நடைப்பயணம் மேற்கொண்டு காஷ்மீர் பகுதியை அடைவதாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக நேற்று அவர் தமிழகத்தை வந்த நிலையில் இன்று காலை அவரது தந்தை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.