Connect with us

நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த ராகுல்காந்தி: வைரல் புகைப்படங்கள்!

News

நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த ராகுல்காந்தி: வைரல் புகைப்படங்கள்!

8a4c0fddcfb4e734ee5181b977327284-2

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டிராக்டரில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மத்திய அரசின் விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் முடிவுக்கு வராத நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

விவசாயிகளின் செய்தியை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்துள்ளேன் என்றும் விவசாயிகளின் குரல்களை அரசு அடங்குவதாகவும் கருப்புச் சட்டங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் 

புதிய விவசாய சட்டம் இரண்டு அல்லது மூன்று தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகவும் அனைத்து விவசாயிகளுக்கும் பாதகமாக இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்துள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top