இன்றைய தினம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சுய சரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ என்ற நூலின் முதல் பாகம் வெளியிடப்படவுள்ளது. இதற்காக நடிகர் சத்யராஜ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் ராகுல்காந்தி சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி சென்னைக்கு வந்துள்ளார்.
சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
முதலமைச்சர் எழுதிய உங்களில் ஒருவன் என்ற நூலை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திதான் மாலை வெளியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 23 ஆண்டுகால வாழ்க்கை வரலாற்றை உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மட்டுமின்றி காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா விழாவில் பங்கேற்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.