Entertainment
இந்தியன் 2 படத்துக்கு ரஹ்மான் வாழ்த்து
இந்தியன் 2 திரைப்படம் நேற்று முதல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. நேற்று முதல் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடை பெற்று வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கர் இயக்குகிறார்.

ஷங்கர் இதற்கு முன் ஹாரிஸ் ஜெயராஜுடன் இரண்டு படங்களில் பணிபுரிந்தார். அந்நியன், நண்பன் உள்ளிட்ட படங்களே அவை.
ரஹ்மானுடன் தொடர்ந்து அனைத்து படங்களிலும் பணிபுரிந்த ஷங்கருக்கு இந்த இரண்டு படங்களில் மட்டுமே இசையமைப்பாளர் மாறினார்.
இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் அல்லாது தனது இந்தியன் 2 படத்துக்கு அனிருத்தை இசையமைக்க சொல்லி உள்ளார்.
இந்நிலையில் ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ரஹ்மான் இந்தியன் 2 படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
