திமுக அரசு தலைமையிலான வேளான் பட்ஜெட் 3வது முறையாக இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேளாண் நிதிநிலை அறிக்கையை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசித்து வருகிறார்.
தமிழ்நாடு அரசால் ரூ.1,695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 2 ஆண்டுகளில், 1.5 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், கேழ்வரகு, கம்பு போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் சிறுதானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும். சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும்; ரூ.82 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்”
சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற உயர் ரக மரக்கன்றுகள் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடப்பட்டுள்ளதாக அறிவித்த வேளாண் துறை அமைச்சர், தரிசு நிலங்களை கண்டறிந்து மா, பலா, கொய்யா நட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னகன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.
வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.
வரலாறு காணாத அளவில் நேரடி நெல் கொள்முதல் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுக்களில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவைகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.