Entertainment
வெள்ளை முடி வயதான தோற்றத்தில் ஷாக் கொடுத்த ராதிகா…
சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்து வைத்திருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார்.
சமீபத்தில் நான் இனி சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க போவதில்லை என்று அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டார்.
ஆனால் வெள்ளித்திரையில் நடிப்பை தொடர்ந்து செய்து வரும் நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் நடிகை ராதிகா வெள்ளை முடியுடன் வயதான தோற்றத்தில் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்த புகைப்படம் தற்போது வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
