‘ராதே ஷ்யாம் ‘ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு !
யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ராதே ஷியாம். பிரமாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பிரபாஸ்க்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே லீடிங் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரபாஸ்ஸின் காதல் கதையினை வைத்து முழுக்க முழுக்க ரொமான்டிக் நிறைந்து காணப்படுவதால் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளின் வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு பல நெகட்டிவ் கமண்ட்கள் வந்த போதிலும் இந்தியா முழுவதும் ரூ. 220 கோடி வசூலித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போது இப்படம் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஓடிடியில் வெளியான பிறகு இப்படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த படம் ஓடிடியில் எந்த அளவிற்கு வெற்றிபெரும் என்பதை நாம் பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
Hop on this magical journey of love with #RadheShyamOnPrime, April 1
#Prabhas @hegdepooja @director_radhaa @UVKrishnamRaju #Vamshi #Pramod @PraseedhaU @UV_Creations @GopiKrishnaMvs @TSeries pic.twitter.com/D7ZcDFfS7y
— amazon prime video IN (@PrimeVideoIN) March 28, 2022
