#BREAKING இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்… சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை!
பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கபடும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கர்களிடத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவித்தார்.
கொரோனா தொற்றை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். இன்றைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை 1,20,000 ஆக உயர்ந்துள்ளது.
ஆக்கப்பூர்வமான தகவல்களை உள்வாங்கிக்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள் வேலை செய்யும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மண்டல அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும். பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
