அடி தூள்..!! வசூலில் மாஸ் காட்டிய ஆர் ஆர் ஆர்.. எத்தனை கோடி தெரியுமா?
நான் ஈ, மாவீரன், பாகுபலி போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் தற்போது ஆர் ஆர் ஆர் என்ற படம் கடந்த மாதம் மார்ச் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது.
இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆ, ராம் சரண் மற்றும் ஆலியா பட் போன்ற முக்கிய நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் கூட “நாட்டு நாட்டு” என்ற பாடல் சோசியல் மீடியாவில் வெளியாகி பட்டைய கிளப்பியது.
இந்நிலையில் இப்படம் 1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் மாஸ் காட்டியுள்ளது. அதன் படி, ஆர் ஆர் ஆர் படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்த நிலையில் தற்போது குலோபல் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி வசூலித்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
1000 crore is a dream run for a film from India. We made our best for you, and you in return showered us with your priceless love.
Thank you Bheem @tarak9999 fans, Ramaraju @AlwaysRamCharan fans and audience across the world. #1000CroreRRR ❤️
An @ssrajamouli film. @DVVMovies pic.twitter.com/V3nnAGdf2e
— RRR Movie (@RRRMovie) April 10, 2022
