ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டும் அளவிற்கு அமைதி..!!

இன்று காலை சென்னை கோயம்பேடு அம்பேத்கர் சிலையை பெரும் கலவரம் நிலவியது. ஏனென்றால் இன்றைய தினம் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. 132 அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் காலை 11 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் 11:45 மணிக்கு பாஜகவினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கிடையே பாஜகவினருக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.

இதில் இரு தரப்பினர் இடையே இரத்தக் காயங்கள் உருவானது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காயமடைந்த பாஜகவினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து விளக்கம் அளித்தார்.

அதன்படி அம்பேத்கர் சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்றும் கட்சிதான் பாஜக என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். ஒருபோதும் வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு அளவில்தான் அமைதியின் வழியில் செல்கிறோம் என்று அண்ணாமலை கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment